ரக்ஷா பந்தன் அன்று வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க் இலவசமாக கொடுங்க.. கடைக்காரர்களுக்கு முதல்வர் அறிவுரை

ரக்ஷா பந்தன் அன்று வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க் இலவசமாக கொடுங்க.. கடைக்காரர்களுக்கு முதல்வர் அறிவுரை

பஞ்சாபில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வீட்டை வெளியே வந்தால் மாஸ்க் அணிவது அங்கு கட்டாயமக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் பொதுமக்கள் அபராதம் விதிப்பதை கண்டு கொள்ளாமல் மாஸ்க் அணியாமல் வெளியே வருவது அதிகரித்து வருகிறது.

ரக்ஷா பந்தன் அன்று வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க் இலவசமாக கொடுங்க.. கடைக்காரர்களுக்கு முதல்வர் அறிவுரை

இந்த சூழ்நிலையில் பஞ்சாபில் மாஸ்க் அணிவதை ஊக்குவிக்கும் வகையில், ரக்ஷா பந்தன் அன்று ஸ்வீட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க் இலவசமாக வழங்கும்படி ஸ்வீட் கடைக்காரர்களுக்கு அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அட்வைஸ் செய்துள்ளார். பஞ்சாபில் ஆகஸ்ட் 2ம் தேதி லாக்டவுன் அமலில் இருந்தாலும், ஸ்வீட் கடைகள் திறந்து கொள்ள அனுமதி அளித்த அடுத்த சில நாட்களில் இந்த அட்வைஸை கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ரக்ஷா பந்தன் அன்று வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க் இலவசமாக கொடுங்க.. கடைக்காரர்களுக்கு முதல்வர் அறிவுரை

மாஸ்க் அணிவதை பிரபலபடுத்துவதற்கு அந்த மாவட்டங்களில் உள்ள இனிப்பு கடைகளின் உரிமையாளர்களிடம் இனிப்புகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 மாஸ்க் இலவசமாக வழங்குவதற்கு அறிவுறுத்தும்படி மாவட்ட கலெக்டர்களிடம் அரசு தெரிவித்துள்ளது. பஸ்ஸாண்ட் மற்றும் முக்கிய பகுதிகளில் மாஸ்க் வெண்டிங் மெஷின்களை நிறுவும்படி மாநில சுகாதாரத்துறை முதல்வர் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.