ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க போன பெண்ணை அந்த கடையிலிருந்த நான்கு பேர் சேர்ந்து கடைக்குள்ளே கற்ப்பழித்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது
![Minor girl raped by four men in Punjab's Patiala [Representative image]](https://imgk.timesnownews.com/story/up_minor_rape_Zqw1pol_ZUkUoWB_BjKePrI_1.jpg?tr=w-600,h-450,fo-auto)
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஒரு 16 வயது பெண் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றார் .அப்போது அந்த கடையிலிருந்த 60 வயதான முதலாளி அந்த பெண்ணை கடைக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்தார். அப்போது அதற்கு பாதுகாப்பாக கடையின் 28 வயதான ஊழியர்கள் அதற்கு காவலிக்கிருந்தனர் .
அதன் பிறகு அக்கடையின் ஊழியர்கள் 18 வயது முதல் 28 வயதுள்ள வாலிபர்கள் ஒவ்வொருவராக அந்த கடைக்குள்ளே சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர் .அதன் பிறகு அந்த பெண்ணிடம் அனைவரும் சேர்ந்து இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோமென்று மிரட்டி அனுப்பினார்கள் .இதனால் பயந்து போன அந்த பெண் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார்
அதன்பிறகு கடந்த ஒரு மாதமாக அந்த பலாத்காரம் செய்த நபர்கள் அந்த பெண்ணை போகும்போதும் வரும்போது கிண்டல் செய்ய தொடங்கினார்கள் .இதனால் அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் ,அது மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தை அவர்கள் வேறு சிலரிடமும் கூறியுள்ளதால் அவர்களும் அந்த பெண்ணை கிண்டல் செய்துள்ளனர் .இதனால் அந்தபெண் அந்த கடைக்காரர்கள் அனைவரின் மீதும் போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்தார்கள்
