பும்ரா விலகல் – தமிழகத்து நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? #IndVsAus

 

பும்ரா விலகல் – தமிழகத்து நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? #IndVsAus

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அற்புதமான ஆட்டத்தை ஆடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் 2:1 எனும் கணக்கில் இந்தியா தோற்றது. ஆனால், அடுத்த தொடரான டி20-ல் 2:1 எனும் கணக்கில் வெற்றி வாகை சூடியது இந்தியா.

டெஸ்ட் போட்டித் தொடரில் மொத்தம் நான்கு ஆட்டங்கள். இதுவரை முடிந்திருக்கும் 3 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா ஒரு முறையும், இந்தியா ஒருமுறையும் வென்றிருக்கின்றன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. எனவே, தொடரில் இரு அணிகளும் சம விகிதத்தில் உள்ளன.

பும்ரா விலகல் – தமிழகத்து நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? #IndVsAus

நேற்று முடிவடைந்த மூன்றாம் டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் விஹாரி, அஷ்வின், ரிஷப் பண்ட் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடி, தோல்வியிலிருந்து டிராவை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர்.

ஆனால், இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஏற்கெனவே இரண்டாம் டெஸ்ட் போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு காயம் ஏற்பட்டது. அதனால், அவர் தொடரிலிருந்து விலகினார். அதனால், அணிக்குள் தமிழக வீரர் நடராஜன் வந்தார்.

மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார். இப்போது இந்தியாவின் முக்கிய பவுலர் பும்ராவும் காயம் அடைந்துள்ளார். அதனால் அவர் அடுத்த போட்டியில் ஆட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பும்ரா விலகல் – தமிழகத்து நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? #IndVsAus

பும்ரா விலகியதால் நான்காம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் இந்த சீசனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடராஜன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நெட் பவுலராக அழைத்துச் செல்லப்பட்ட நடராஜன் எதிர்பாராத விதமாக அணிக்குள் சேர்க்கப்பட்டார். வருண் சக்கரவர்த்திக்கு காயம் குணமடையாததால் அவர் இந்திய அணியில் இடம்பெற்றார்.

பும்ரா விலகல் – தமிழகத்து நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? #IndVsAus

நடராஜன் ஒருநாள் அணியில் இருந்தாலும் முதல் இரு போட்டிகளில் ஆட விடவில்லை. மூன்றாம் போட்டியில் களமிறங்கிய நடராஜன் 3 முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கினார். அதற்கு அடுத்த டி20 போட்டிகளிலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார் நடராஜன்.

இப்போது டெஸ்ட் போட்டியில் களம் இறக்கப்பட்டால் அதிலும் தனது சாதனையை நிகழ்த்துவார் நடராஜன் என்று உறுதியாக நம்பலாம்.