திருச்சியில் முதல்வரிடம் நேரில் மனு அளித்தவர்!- புலியூர் நாகராசன் கொரோனாவுக்கு பலி

 

திருச்சியில் முதல்வரிடம் நேரில் மனு அளித்தவர்!- புலியூர் நாகராசன் கொரோனாவுக்கு பலி

தமாகா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராசன் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

திருச்சியில் முதல்வரிடம் நேரில் மனு அளித்தவர்!- புலியூர் நாகராசன் கொரோனாவுக்கு பலி

தமாகா விவசாய அணி தலைவராக செயல்பட்டு வந்தவர் புலியூர் நாகராசன். கடந்த 26ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்தார். அப்போது, விவசாயிகள் சங்கத் தலைவர்களுடனான சந்திப்பில் வட்டத்தில் நாகராசன் பங்கேற்றார். மேலும் முதல்வர் பழனிசாமியிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில், “தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை கேட்டுப் பெற வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், இடுபொருள்கள், வேளாண் உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். காவிரி டெல்டாவில் நேரடி பாசனமின்றி பம்ப் செட் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி முன்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வைரஸ் தொற்றில் இருந்து விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களை பாதுகாக்க முகக்கவசம், கிருமி நாசினி மருந்துகளை ஊராட்சி தோறும் நேரில் சென்று இலவசமாக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

திருச்சியில் முதல்வரிடம் நேரில் மனு அளித்தவர்!- புலியூர் நாகராசன் கொரோனாவுக்கு பலி

ஜி.கே.வாசனின் வலதுகரமாக செயல்பட்டு வந்த நாகராசனுக்கு நேற்று காய்ச்சல், தொண்டை வலி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் திருச்சியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்த விவசாயிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. கொரோன