ஜார்ஜ் பிளாய்ட் கொலையை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டிய பெண்ணுக்கு புலிட்சர் விருது!

 

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டிய பெண்ணுக்கு புலிட்சர் விருது!

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது வெள்ளை இன போலீசார் தாக்குதல் நடத்துவது வழக்கமான விஷயமாகவே இருந்தது. நிறவெறியின் காரணமாக அவர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு வந்தனர். அது ஒருவரின் இறப்பு வரை மட்டும் தான். அதற்குப் பின் ஒட்டுமொத்த அமெரிக்காவை அச்சம்பவம் மாற்றியமைத்தது. அவரின் பெயர் ஜார்ஜ் பிளாய்ட்.

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டிய பெண்ணுக்கு புலிட்சர் விருது!

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். நிறவெறியினால் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதால் அவரது இறப்புக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

வெள்ளையின மக்களும் போராடியதால் விவகாரம் உலகளவில் பரவியது. அனைவரும் சமூக வலைதளங்களிலும் நீதி கோரினர். இதன்மூலம் எழுந்த போராட்டங்கள் நிறவெறிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சம்பந்தப்பட்ட போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய்யப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். மேலும் ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தாருக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது. அப்போது இருந்து நிறவெறிக்கு எதிரான மனநிலை மக்களிடையே சென்றுசேர்ந்தது. அதற்கெல்லாம் காரணம் ஜார்ஜ் பிளாய்ட் கொலை சம்பவத்தை வீடியோ தான்.

Pulitzer Prize - Wikipedia

அந்த வீடியோவை எடுத்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண். அன்று அவர் வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால் இன்று அவருக்கு நீதியும் கிடைத்திருக்காது. அப்படியொரு சம்பவம் நடந்ததாக வெளியுலகிற்கும் தெரிந்திருக்காது. இச்சூழலில் டார்னெல்லாவை பாராட்டும் விதமாக அவருக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.