புஜாரா, மயங், ரஹானே…. ஏமாற்றம் தந்த இந்தியாவின் முன்னணி வீரர்கள் – IndVsAus டெஸ்ட் Updates

 

புஜாரா, மயங், ரஹானே…. ஏமாற்றம் தந்த இந்தியாவின் முன்னணி வீரர்கள் –  IndVsAus டெஸ்ட் Updates

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தொடக்க வீரர்களாக ப்ரித்தீவ் ஷாவும் மயங் அகர்வாலும் இறங்கினார்கள். ப்ரித்தீவ் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார்.

புஜாரா, மயங், ரஹானே…. ஏமாற்றம் தந்த இந்தியாவின் முன்னணி வீரர்கள் –  IndVsAus டெஸ்ட் Updates

அடுத்து புஜாரா களம் இறங்கினார். மறுமுனையில் பந்துகளின் போக்குகளுக்கு ஏற்ப ஆடி வந்த மயங் 2 பவுண்ட்ரிகளை விளாசினார். 44 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார் மயங்.

அடுத்த பேட்ஸ்மேனாக வந்தார் கேப்டன் விராட் கோலி. புஜாரா 88 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெகு நிதானமாக ஆடினார். இடைவேளைக்குப் பிறகு வந்த புஜாரா, ரன் எடுப்பதை வேகப்படுத்தினார். குறிப்பாக லயன் பந்து வீச்சை அடிக்க பயன்படுத்திக்கொண்டார். ஆனால், அவரிடமே தம் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார். 160 பந்துகளைச் சந்தித்த புஜாரா 43 ரன்களை எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகள் அடங்கும்.

புஜாரா, மயங், ரஹானே…. ஏமாற்றம் தந்த இந்தியாவின் முன்னணி வீரர்கள் –  IndVsAus டெஸ்ட் Updates

விராட் கோலி தனது அரை சதத்தைக் கடந்தார். 130 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார். ரஹானே களம் இறங்கி 2 பவுண்டரிகளோடு 45 பந்துகளோடு 14 ரன்களை எடுத்து ஆடி வருகிறார்.

180 பந்துகளைச் சந்தித்து 74 ரன்களை விராட் கோலி எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் ரஹானே 42 ரன்களில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார்.

புஜாரா, மயங், ரஹானே…. ஏமாற்றம் தந்த இந்தியாவின் முன்னணி வீரர்கள் –  IndVsAus டெஸ்ட் Updates

அடுத்து நன்கு ஆடிக்கொண்டிருந்த விஹாரி 16 ரன்களோடு அவுட்டானர். அடுத்து அஸ்வின் களம் இறங்கியிருக்கிறார். 84 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது இந்திய அணி.