புஜாராவிடமிருந்து பறிக்கப்பட்ட துணை கேப்டன் பதவி

 

புஜாராவிடமிருந்து பறிக்கப்பட்ட துணை கேப்டன் பதவி

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையே முதலில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2:0 எனும் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்த, டி20 போட்டித் தொடரை 2:0 எனும் கணக்கில் இந்திய அணி வென்றது. இதில் தமிழகத்தின் நடராஜன் தனித்து வெளிப்பட்டார்.

தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டை ஆஸ்திரேலியாவும், இரண்டாம் டெஸ்ட்டை இந்தியாவும் வென்றிருக்கிறது. இரண்டாம் போட்டியில் தலைமையேற்ற ரஹானே அசத்தலான ஆட்டத்தையும் நேர்த்தியான கேப்டன்ஷிப்பை அளித்தார். அதுவே அந்தப் போட்டியில் வெல்ல உதவியது.

புஜாராவிடமிருந்து பறிக்கப்பட்ட துணை கேப்டன் பதவி

முதல் போட்டியில் விராட் கோலி கேப்டன், துணை கேப்டன் ரஹானே. முதல் போட்டி முடிந்ததும் விராட் கோலி இந்தியா திரும்பியதும், கேப்டன் பொறுப்பு ரஹானே வசம் வந்தது. புஜாரா துணை கேப்டன் பொறுப்பேற்றார். ஏனெனில், அந்த அணியில் சீனியர் வீரர் அவரே.

இந்த சீசன் தொடங்கும் முன்பே, ’சிறப்பாக ஆடுவார்’ என்று பலரும் நம்பிக்கையோடு சொன்னவது புஜாராவைத்தான். ஆனால், இரண்டு போட்டிகளிலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி ரன்கள் சேர்க்க வில்லை. ஆனால், களத்தில் நீண்ட நேரம் உறுதியாக நின்றார்.

புஜாராவிடமிருந்து பறிக்கப்பட்ட துணை கேப்டன் பதவி

இந்த நிலையில் மூன்றாம் போட்டியில் ரோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டிருக்கிறார். கடைசி நேரத்தில் ஏதேனும் மாறுதல் இருக்கும் என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அதற்கெல்லாம் விடை அளிக்கும் விதத்தில் ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடும் போட்டோக்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மூன்றாம் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் பதவியை புஜாராவிடமிருந்து பறித்து, ரோஹித் ஷர்மாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ரோஹித் ஷர்மாவை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் புஜாரா. ஆயினும் ரோஹித் ஷர்மாவுக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டதற்கு காரணம், ரோஹித் அதிக போட்டிகளில் கேப்டனாக ஆடி அனுபவம் பெற்றவர் என்பதால்தான்.

எனவே, அடுத்த இரண்டு போட்டிகளில் ரஹானா ஓய்வெடுக்க விரும்பினால், அந்த நேரத்தில் அணியை வழிநடத்த ரோஹித்தால் சிறப்பாக முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.