“அதிமுக தொண்டர்களே இந்த தலைமை தேவையா?” கோவையில் பரபரப்பு போஸ்டர்!

 

“அதிமுக தொண்டர்களே இந்த தலைமை தேவையா?” கோவையில் பரபரப்பு போஸ்டர்!

முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட்டணி மூலமாக 23 தொகுதிகளை பெற்ற அன்புமணி, ஓபிஎஸ் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார். கூட்டணியில் பாமக இல்லையென்றால் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என்று அவர் கூறுகிறார். முதலில் போட்டியிட்டு 18 இடங்களில் தோல்வி அடைந்ததை பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

“அதிமுக தொண்டர்களே இந்த தலைமை தேவையா?” கோவையில் பரபரப்பு போஸ்டர்!

ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதால்தான், அதிமுகஎம்எல்ஏக்கள் உதவியுடன் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யானார். பாமக சிறிய கட்சி, அதிமுகவை கிண்டல் செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது என்றார்.இதை தொடர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி நீக்கப்பட்டார். கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகியதாக அதிமுக தலைமை குற்றச்சாட்டியது.இதை தொடர்ந்து சசிகலா புகழேந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கியது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“அதிமுக தொண்டர்களே இந்த தலைமை தேவையா?” கோவையில் பரபரப்பு போஸ்டர்!

இந்நிலையில் கோவை மாநகரில் புகழேந்தி புகைப்படத்தை பதிவிட்டு பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் அனாதை கட்சியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், கூட்டணி கட்சிகளின் அவமானப்படுத்தி பேசுவதா?இதனை கண்டித்தால் கட்சியில் இருந்து நீக்குவதா? மானமிகு தொண்டர்களே இந்த தலைமை தேவையா? என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.