darbar
  • January
    24
    Friday

Main Area

Main



புகழேந்தியிடமிருந்து பறிபோன பதவி...

டிடிவி தினகரன் மற்றும் எம்.பி.சம்பத்
டிடிவி தினகரன் மற்றும் எம்.பி.சம்பத்

கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அமமுகவிற்கு எதிராக பேசி வந்த நிலையில் கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத்தை டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சேலத்தில் புகழேந்தி முன்னிலையில் நடைபெற்ற அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டத்தில், புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. மேலும் அமமுகவில் அதிருப்தி இருப்பது உண்மைதான் என்றும், டிடிவி தினகரன் தம்மை நம்பி வந்தவர்களை ஏமாற்றிவருவதாகவும் தொடர் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தார். 

அமமுக


டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் புகழேந்தி. கர்நாடக மாநில அமமுக செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்துவந்த புகழேந்தியின் பொறுப்பை டிடிவி தினகரன் எம்.பி. சம்பத்துக்கு வழங்கியுள்ளார்.
 

2018 TopTamilNews. All rights reserved.