புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு: கைதி தப்பியோடிய விவகாரத்தில் காவலர்கள் இருவர் இடைநீக்கம்!

 

புதுக்கோட்டை சிறுமி  கொலை வழக்கு: கைதி தப்பியோடிய விவகாரத்தில் காவலர்கள் இருவர் இடைநீக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார்,  அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர். அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

புதுக்கோட்டை சிறுமி  கொலை வழக்கு: கைதி தப்பியோடிய விவகாரத்தில் காவலர்கள் இருவர் இடைநீக்கம்!

இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த பூ வியாபரியான 27 வயதான ராஜேஷ் என்கிற ராஜா, சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் இதனால் சிறுமி அலறி துடிக்க, அங்கிருந்த கருவேல மரக்கட்டையை எடுத்து சிறுமி தலையில் அடித்து கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது. 7 வயது சிறுமி வன்கொடுமை, கொலை சம்பவத்தில் கைதான ராஜா என்பவர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கைதி ராஜாவை காவலர்கள் அழைத்து சென்ற போது தப்பியோடியதாகவும், அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜா தப்பியோடிய விவகாரத்தில் காவலர்கள் முருகையன் மற்றும் கோகுலகுமாரை இடைநீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.