“சீட்டே இல்ல; வேட்டி மட்டும் எதுக்கு” : அதிமுக கரைவேட்டியை கொளுத்திய நிர்வாகி!

“சீட்டே இல்ல; வேட்டி மட்டும் எதுக்கு” : அதிமுக கரைவேட்டியை கொளுத்திய நிர்வாகி!

சீட் கிடைக்காத விரக்தியில் அதிமுக நிர்வாகி ஒருவர் அதிமுக கரை வேட்டியை தீயிட்டு எரித்த சம்பவம் ஆலங்குடியில் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி தலைவரும், அதிமுகவின் கிளைக் கழக செயலாளருமான கனகராஜ். இவர் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.

“சீட்டே இல்ல; வேட்டி மட்டும் எதுக்கு” : அதிமுக கரைவேட்டியை கொளுத்திய நிர்வாகி!

அவர் மட்டுமல்ல அந்த தொகுதியை சேர்ந்த சுமார் 30 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் யாரும் சீட் ஒதுக்காமல், கடந்த 45 நாட்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து அதிமுகவில் சேர்ந்த தர்ம தங்கவேலுக்கு ஆலங்குடியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள சீனியர் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

“சீட்டே இல்ல; வேட்டி மட்டும் எதுக்கு” : அதிமுக கரைவேட்டியை கொளுத்திய நிர்வாகி!

இந்நிலையில் அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாசலம் சமாதி முன்பு கட்டியிருந்த அதிமுக கரை வேட்டியை தீயிட்டு கொளுத்தி பின்பு அதே வேகத்தில் திமுக வேட்டியை கட்டிக்கொண்டார். பின்னர் அவரை அங்கு வந்த சந்தித்த அப்பகுதி திமுக நிர்வாகி முன்னிலையில் கனகராஜ் திமுகவில் இணைந்து கொண்டார்.

“சீட்டே இல்ல; வேட்டி மட்டும் எதுக்கு” : அதிமுக கரைவேட்டியை கொளுத்திய நிர்வாகி!

முன்னதாக அதிமுகவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் முதல்வர் ஆலங்குடிக்கு பரப்புரை செய்ய வந்த போது, வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.