Home தமிழகம் புதுக்கோட்டை- தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாய்! கல்லூரி மாணவியுடன் கணவன் ஓடியதால் நடந்த கொடூரம்!

புதுக்கோட்டை- தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாய்! கல்லூரி மாணவியுடன் கணவன் ஓடியதால் நடந்த கொடூரம்!

இரவு சாப்பாட்டில் தூக்க மாத்திரைகள் கலந்துகொடுத்ததால் பிள்ளைகள் அசந்து தூங்கினார்கள். அப்போது, முன்னரே திட்டமிட்டபடி, அந்த குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார் தாய் ராதா. பின்னர் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட ராதா, மூவருக்கும் சேர்த்து தீ வைத்துள்ளார். இதில், தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் தீயில் எரிந்தபோது அலறியுள்ளனர். ராதாவும் தீயில் வெந்தபோது அலறியுள்ளார்.

இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, ராதாவும், அப்ரீத்தும் அதே இடத்தில் உயிரிழ்ந்தனர். சிறுவன் அபிஷேக் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அபிஷேக் உயிரிழந்தான்.

இத்தனை துயரம் இங்கே நடந்திருக்கும்போது, அந்த படுபாவி சின்னப்போண்ணோடு உல்லாசம் அனுபவிக்கிறான் பாரு என்று அப்பகுதியினர் திட்டித்தீர்த்தனர்.
சம்பவம் குறித்து, வழக்குபதிவு செய்துகொண்டு, கல்லூரி மாணவியுடன் தலைமறைவான முத்துவை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ள வல்லம்பக்காடு ஊரைச்சேர்ந்தவர் முத்து(45). இவரது மனைவி ராதா(34). இவர்களுக்கு அபிஷேக்(13), அபிரித்(9) என்ற இரண்டு மகன்கள். இருவரும் அதே பகுதியில் படித்து வந்தனர்.
சந்தோசமாக இருந்த குடும்பத்தில் கல்லூரி மாணவியினால் அந்த சந்தோசம் பறிபோனது. ராஜேந்திரபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் முத்துவுக்கும் பழக்கம் உண்டாகி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்கும் அளவுக்கு அது போயிருக்கிறது. இது தெரியவந்ததும், குடும்பத்தில் பிரச்சனை.

ராதா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், முத்து அந்த கல்லூரி மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அந்த மாணவியுடன் ஊரை விட்டே ஓடியிருக்கிறார் முத்து.

இது பற்றிய விபரம் தெரியவந்ததும் மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

கணவர் தன்னையும், பிள்ளைகளையும் விட்டு மாணவியுடன் ஓடிப்போனதால், மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் ராதா. அந்த நேரத்தில்தான் பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளும் அந்த முடிவை எடுத்திருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! சரிந்து விழுந்த கட்டடம்!!

துருக்கி அருகே உள்ள ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் அதிகமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. கிரீஸ்...

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா உயிர் பலி! இன்றைய பாதிப்பு நிலவரம்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 51 லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

சொத்துக்களை அபகரித்து நடுத்தெருவில் தவிக்கவிட்ட மகன்; 108வயது மூதாட்டியிடம் டிஎஸ்பி அளித்த உறுதி

விழுப்புரம் சிறுவந்தாடு கிராமத்தில் மூன்று விதவை மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் 108வயது மூதாட்டி கிருஷ்ணவேணி. சொந்த வீடு 11 ஏக்கர் நிலம் இருந்தும் இந்த அவலம் ஏன்...

எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜாதலைமையில், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா உருவ படத்திற்கு...
Do NOT follow this link or you will be banned from the site!