புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வுக்கான அரசாணை வெளியீடு! கொரோனா வரியும் இருக்கு…

 

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வுக்கான அரசாணை வெளியீடு! கொரோனா வரியும் இருக்கு…

கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதைப் போல, புதுச்சேரியிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு 4.0-வில் தமிழகத்தை போலவே, புதுச்சேரியிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது உள்ளூர் பேருந்துகள், கார், ஆட்டோ இயக்கம் உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் படி இன்று புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 5 வழித்தடங்களில் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன் காரணமாக அங்கு 50 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வுக்கான அரசாணை வெளியீடு! கொரோனா வரியும் இருக்கு…

இந்நிலையில் தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்துக்கும் 20% கொரோனா வரி விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இனி தமிழகத்தில் விற்கப்படும் மதுபான விலையும், புதுச்சேரியில் விற்கப்படும் மதுபானங்களின் விலையும் இனி சமமாக இருக்கும்.