60 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டும் வெறிச்சோடிகிடந்த புதுச்சேரி மதுபான கடைகள்

 

60 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டும் வெறிச்சோடிகிடந்த புதுச்சேரி மதுபான கடைகள்

புதுச்சேரியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டபோதும், மதுகுடிப்போர் வராததால் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதைப் போல, புதுச்சேரியிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு 4.0-வில் தமிழகத்தை போலவே, புதுச்சேரியிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது உள்ளூர் பேருந்துகள், கார், ஆட்டோ இயக்கம் உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் படி இன்று புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 5 வழித்தடங்களில் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன் காரணமாக அங்கு 50 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

60 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டும் வெறிச்சோடிகிடந்த புதுச்சேரி மதுபான கடைகள்

இந்நிலையில் பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் போன்ற மதுபானங்கள் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு, தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் விலைக்கு நிகரான விலை, தமிழகத்தில் விற்கப்படாத உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களுக்கு 25 சதவிகித வரி உயர்வு என இப்படித்தான் விற்பனையை துவக்கியிருக்கின்றன புதுச்சேரி மதுபானக்கடைகள். குறைந்த விலையில் பலவித மதுபானங்களுக்கு பிரசித்தி பெற்ற புதுச்சேரியில் இந்த விலை உயர்வு, மதுகுடிப்போர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விலைஉயர்வால் மதுபானக்கடைகளை தவிர்க்கும் மதுகுடிப்போர், அரசு சாராய வடி ஆலை சாராயத்தை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். மதுவிற்பனை வருவாய்தான் புதுச்சேரி அரசுக்கு பிரதானம், ஆனால், தற்போதைய விலை உயர்வால் பெருமளவு வருவாய் குறையும் என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும் கொரோனா தொற்று பரவாமல் இருந்தால் சரி என்ற நிலையில் புதுச்சேரி அரசு உள்ளது.