புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல், இரண்டாவது ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து!

 

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல், இரண்டாவது ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பால் திறக்கப்படாத நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் கல்லூரி திறப்புக்கு பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல், இரண்டாவது ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து!

இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.