புதுச்சேரி: கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பு… மருத்துவக் கல்லூரியை கையகப்படுத்தி நாராயணசாமி அதிரடி!

புதுச்சேரி: கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பு… மருத்துவக் கல்லூரியை கையகப்படுத்தி நாராயணசாமி அதிரடி!

புதுச்சேரியில் கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை புதுச்சேரி அரசு கையகப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி: கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பு… மருத்துவக் கல்லூரியை கையகப்படுத்தி நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. போதுமான படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். புதுச்சேரி அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யாமல் வேடிக்கை பார்ப்பதாக வழக்கம் போலத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புகார் வாசித்தார்.

புதுச்சேரி: கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பு… மருத்துவக் கல்லூரியை கையகப்படுத்தி நாராயணசாமி அதிரடி!
இதனால் புதுச்சேரியில் உள்ள ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், இரண்டு தனியார் கல்லூரிகள் மட்டுமே அரசின் கோரிக்கையை ஏற்க முன் வந்தன. ஐந்து கல்லூரிகள் மறுத்துவிட்டன. கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை இல்லாத நிலையில் அரசு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. நேற்று இரவு தொடங்கி நீண்ட நேரம் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதைத தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் சுகாதாரத் துறை செயலாளருமான அருண் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசிடம் ஒப்புக்கொண்ட படி தனியார் மருத்துவமனைகள் கொரோனா வார்டுக்காக படுக்கைகளை வழங்க வேண்டும். கொரோனா வார்டு அமைக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜிப்மர், அரசு பொது மருத்துவமனை பரிந்துரைக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களைத் திருப்பி அனுப்புதல் கூடாது.

புதுச்சேரி: கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பு… மருத்துவக் கல்லூரியை கையகப்படுத்தி நாராயணசாமி அதிரடி!

புதுச்சேரி அரசின் உத்தரவை ஏற்க மறுத்த அரியூர் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்ற பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கிறது. அங்கு இனி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.