புதுச்சேரி காங்கிரஸில் காலியான முக்கிய விக்கெட்… தாமரையை மலர வைக்க பாஜக போடும் கணக்கு பலிக்குமா?

 

புதுச்சேரி காங்கிரஸில் காலியான முக்கிய விக்கெட்… தாமரையை மலர வைக்க பாஜக போடும் கணக்கு பலிக்குமா?

தென்னிந்தியாவில் கால் பதிக்கும் நோக்கில் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதன் முதல் அடித்தளமாக அமைச்சர் நமச்சிவாயத்தை இன்று ராஜினாமா செய்யவைத்து, நட்டா முன்னிலையில் கட்சியில் இணையவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகம் , புதுச்சேரியில் வருகின்ற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் கட்சி தாவல், தேர்தல் பேரங்கள் என களைகட்டியுள்ளது. எப்படியாவது தென்னிந்தியாவில் தாமரையை மலர வைக்கும் நோக்கில் தீயாக வேலை செய்துவருகிறது பாஜக. ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை வளைத்துப் போட்டு காரியத்தைச் சாதித்தது.

அதே திட்டத்தை புதுச்சேரியிலும் களமிறக்கியிருக்கிறது. இது பிளான் ஏ என்றால், லோக்கல் தாதாக்களை அரசியல் பிரமுகராக்கி அழகு பார்ப்பது பிளான் பி. சமீபத்தில், புதுச்சேரியைக் கலக்கிய எழிலரசி பாஜகவில் இணைந்தது பிளான் பி-க்கு உதாரணம். இச்சூழலில், காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள், பிரமுகர்கள், நிர்வாகிகளை இழுக்க பாஜக தீவிர முயற்சிசெய்து வருகிறது.

புதுச்சேரி காங்கிரஸில் காலியான முக்கிய விக்கெட்… தாமரையை மலர வைக்க பாஜக போடும் கணக்கு பலிக்குமா?

அடிபொடிகளை இழுக்க வேண்டுமென்றால் பெரிய தலைகட்டை இழுப்பது தான் திட்டத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், காங்கிரஸின் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மாநில தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயத்தை வலையில் விழ வைத்திருக்கிறது. அவரை இழுத்துவிட்டால் தன்னுடைய அரசியல் எல்லையை விஸ்தரிக்கலாம் என்று கணக்கு போட்டுள்ளது.

ஏற்கனவே முதல்வர் பறிபோன ஏமாற்றத்திலிருந்த நமச்சிவாயத்திற்கு, அவரின் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது காங்கிரஸின் மீது கடும் கோபத்தை உண்டாக்கியது. நேரம் பார்த்து குறிவைத்து தூக்கும் கழுகு போல வட்டமிட்ட பாஜகவுக்கு இது சாதகமாக மாறியது. உடனடியாக அவருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி பேரம் நடைபெற்றது.

புதுச்சேரி காங்கிரஸில் காலியான முக்கிய விக்கெட்… தாமரையை மலர வைக்க பாஜக போடும் கணக்கு பலிக்குமா?

இதில் அவர் பாஜகவி இணைய சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது நமச்சிவாயம் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்வதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியிருக்கிறது.

சபாநாயகர் சிவக்கொழுந்துவிடமும் முதல்வர் நாராயணசாமியிடம் முறைப்படி ராஜினாமா கடிதத்தை நமச்சிவாயம் இன்று வழங்கவிருக்கிறார். வரும் 27ஆம் தேதி டெல்லி சென்று பாஜக தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் கட்சியில் இணைகிறார். இதையடுத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து பேசுவார். இதுபோன்ற தகவல்கள் உலா வந்தன.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கான ஏற்பாடுகளையும் அவர் தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டது. டெல்லியிலிருந்து திரும்பிய பின், ஜன.31ஆம் தேதி புதுச்சேரி வரும் நட்டாவின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களை நமச்சிவாயம் பாஜகவில் இணையவைக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் காங்கிரஸில் இருக்கும் பல முக்கிய நிர்வாகிகள் தயக்கம் இல்லாமல் பாஜகவில் இணைவார்கள் என்று கூறப்பட்டது.

புதுச்சேரி காங்கிரஸில் காலியான முக்கிய விக்கெட்… தாமரையை மலர வைக்க பாஜக போடும் கணக்கு பலிக்குமா?

இந்நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக விடுக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போது முழு உரிமை கொடுக்கப்பட்டது. அமைச்சராக சுதந்திரமாகச் செயல்பட்டார்.

ஆனால் அவர் கட்சிக்கு மிக பெரிய துரோகம் செய்து விட்டார். இதன் காரணமாக அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவருடன் செல்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.