நாளை மறுநாள் புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம்

 

நாளை மறுநாள் புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் திங்கட் கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுவை மாநிலத்தின் துணை நிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 18 ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே அவர், புதுச்சேரி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு போட்டு அதிரடி காட்டினார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸுக்கும் என்.ஆர்.காங்கிரசுக்கும் தலா 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் வருகிற 22ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார்.

நாளை மறுநாள் புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம்

பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்ட நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் திங்கட் கிழமை காலை 10 மணிக்கு சிறப்புக்கூட்டம் நடைபெறவிருப்பதாக பேரவை செயலர் முனுசாமி அறிவித்துள்ளார். அப்போது முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.