“முதல்வர் பதவி விலகவேண்டும் ” : பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிகள் கடிதம்!

“முதல்வர் பதவி விலகவேண்டும் ” : பெரும்பான்மையை நிரூபிக்க  எதிர்க்கட்சிகள் கடிதம்!

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் பாஜகவின் தூண்டுதலின் பேரில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களில் 14 இடங்கள் மட்டுமே உள்ளதால் முதல்வர் நாராயணசாமி அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லை என கூறப்படுகிறது. ஆனால் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்போம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

“முதல்வர் பதவி விலகவேண்டும் ” : பெரும்பான்மையை நிரூபிக்க  எதிர்க்கட்சிகள் கடிதம்!

இந்நிலையில் கிரண்பேடியுடன் புதுச்சேரி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு நிகழ்த்தினர். சட்டமன்றத்தில் ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு சென்று திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” முதல்வர் நாராயணசாமி பதவி விலக வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை” என்றார்.

“முதல்வர் பதவி விலகவேண்டும் ” : பெரும்பான்மையை நிரூபிக்க  எதிர்க்கட்சிகள் கடிதம்!

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக புதுச்சேரி தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் துணைநிலை ஆளுநர் மாளிகை சென்று மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.