பள்ளி, கல்லூரிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை : அமைச்சர் தகவல்!

 

பள்ளி, கல்லூரிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை : அமைச்சர் தகவல்!

புதுச்சேரியில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லையென அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பரிசீலித்தன. ஆனால் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் முடிவிலிருந்து மாநில அரசுகள் பின் வாங்கியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை : அமைச்சர் தகவல்!

இந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், மூன்றாவது அலை எப்போது வரும் என்பது தெரியவில்லை. அதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பள்ளி கல்லூரிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார்.