மூன்று கட்டங்களாக நடைபெறும் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்!

 

மூன்று கட்டங்களாக நடைபெறும் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்!

புதுச்சேரி மாநிலத்தில் மூன்று கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் விரைவில் தேர்தலை நடத்த வேண்டுமென புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

மூன்று கட்டங்களாக நடைபெறும் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்!

இந்த நிலையில், புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக புதுச்சேரி தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி 1 மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.