புதுச்சேரி அரசு கவிழ மிக ‘முக்கிய’ காரணமான எம்எல்ஏ அதிரடி நீக்கம்!

 

புதுச்சேரி அரசு கவிழ மிக ‘முக்கிய’ காரணமான எம்எல்ஏ அதிரடி நீக்கம்!

புதுச்சேரியில் ஏற்கனவே நான்கு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருந்தனர். அப்போது கூட காங்கிரஸ் கூட்டணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருந்தது. ஆனால் நேற்று இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தபோதே நாராயணசாமி அரசு கவிழ்வது உறுதியானது.

புதுச்சேரி அரசு கவிழ மிக ‘முக்கிய’ காரணமான எம்எல்ஏ அதிரடி நீக்கம்!

அதில் ஒருவர் திமுக எம்எல்ஏ வெங்கடேசன். அவரை தற்காலிகமாக நீக்குவதாகச் சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். மற்றொருவரான காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனைத் தற்போது காங்கிரஸ் கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை மீறி நடந்துகொண்டதால் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தலைமை விளக்கம் அளித்துள்ளது.