புதுச்சேரியில் பயங்கரம்: வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை!

 

புதுச்சேரியில் பயங்கரம்: வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை!

புதுச்சேரியில் வீட்டு வாடகையை கொடுக்கச் சொன்ன உரிமையாளாரை வாடகைக்கு குடியிருந்தவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் பயங்கரம்: வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை!
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் வருமானம் இழந்து உள்ளனர். அதே நேரத்தில் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. பள்ளிக் கட்டணம், மின்சார கட்டணம் என்று பல்வேறு பிரச்னைகளை சமானிய மக்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். சென்னையில் வாடகை கேட்டதற்காக உரிமையாளரை இளைஞர் ஒருவர் ஓடஓட வெட்டிக் கொலை செய்தார். அதே போன்ற ஒரு சம்பவம் புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது.

புதுச்சேரியில் பயங்கரம்: வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை!
புதுச்சேரி பாக்குமுடையான்பேட்டை ஜீவா காலனியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஐந்து வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். அதில் அருண் குமார் என்பவர் குடியிருந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக யாரும் சரியாக வாடகை வழங்கவில்லை.
அருண் குமார் இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இறைச்சி கடையில் நல்ல வியாபாரம் நடப்பதால் வாடகையைத் தரும்படி கேட்டுள்ளார். இதனால் அருண் குமாருக்கும் புருஷோத்தமனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. ஐந்து மாத வாடகையை செலுத்த வேண்டும், இல்லை என்றால் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று புருஷோத்தமன் கராராக கூறியுள்ளார்.
இந்த நிலையில் வாடகை கேட்டு புருஷோத்தமன் நேற்று இரவு அருண் குமார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

புதுச்சேரியில் பயங்கரம்: வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை!

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அருண் குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து புருஷோத்தமனை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். புருஷோத்தமனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக புதுச்சேரி கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் குமாரை கைது செய்தனர். வாடகை கேட்டதற்காக உரிமையாளர் குத்தி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.