கொரோனாவில் இருந்து மீண்டாலும் புதிய நோய்த்தொற்று அபாயம்… பகீர் கிளப்பும் சுகாதாரத்துறை செயலர்!

கொரோனாவில் இருந்து மீண்டாலும் புதிய நோய்த்தொற்று அபாயம்… பகீர் கிளப்பும் சுகாதாரத்துறை செயலர்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் சூழலில், கடந்த சில நாட்களாக கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலைக்கும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கையை, இப்போதே மாநில அரசுகள் முடுக்கிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டாலும் புதிய நோய்த்தொற்று அபாயம்… பகீர் கிளப்பும் சுகாதாரத்துறை செயலர்!

இந்த நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் புதிய நோய்த்தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் அருண், மியூகோர்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று தற்போது பரவி வருகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் நபர்களுக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கொரோனாவில் இருந்து மீண்டாலும் புதிய நோய்த்தொற்று அபாயம்… பகீர் கிளப்பும் சுகாதாரத்துறை செயலர்!

தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்து திரும்பும் சர்க்கரை நோயாளிகள், செயற்கை சுவாசம் சிகிச்சை பெற்ற நோயாளிகள், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுக் கொண்ட நோயாளிகளை இந்த நோய் தாக்க அதிகளவு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். தலைவலி, முகத்தில் வலி, மூக்கடைப்பு, கண் மேல் இமை இறங்குதல், இரட்டைப் பார்வை, பல்வலி உள்ளிட்டவை இந்த நோயின் அறிகுறிகளாம். சரியான நேரத்தில் இதை கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிடில் மூளைக்கு பரவி உயிரை பறிக்கும் அளவுக்கு அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டாலும் புதிய நோய்த்தொற்று அபாயம்… பகீர் கிளப்பும் சுகாதாரத்துறை செயலர்!

மேற்கண்ட அறிகுறிகள் லேசாக தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வீட்டிலேயே ஆக்சிஜன் உபயோகிப்பவர்கள் ஸ்டீராய்டு மருந்தை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.