புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!

 

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் பணியாற்றிய அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி அரசியல் களத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அடுத்தடுத்து, எம்.எல்.ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்தது முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இது மட்டுமில்லாமல், ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் கிரண்பேடியை பதவி நீக்கம் செய்யக்கோரி முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தினார். இதன் எதிரொலியால் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதில் தமிழிசை சவுந்தரராஜன் பணியமர்த்தப்பட்டர்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!

இந்நிலையில் கிரண்பேடியின் பதவிக்காலத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு அதிகாரி, மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட 5 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை நிலை ஆளுநர் அலுவலக சிறப்பு அதிகாரி தேவநிதிதாஸ்- என்பவரும் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்புக்கு மலர்வண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.