புதுச்சேரி ஆளுநர் எதிர்ப்பை மீறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

 

புதுச்சேரி ஆளுநர் எதிர்ப்பை மீறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஜூலை 30க்குள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்தது. அதன்படி இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் பெற முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதினார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நீண்ட இழுபறிக்குப் பின்னர் மத்திய அரசு இதற்கான எழுத்துப்பூர்வமான ஒப்புதலை அளித்தது. அதன்படி இன்று பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

புதுச்சேரி ஆளுநர் எதிர்ப்பை மீறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

இருப்பினும் இன்று புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது. இந்த நிலையில் ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பை மீறி புதுச்சேரி பேரவையில் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வேறு ஒரு தினத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.