ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

 

ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் விஞ்ஞானிகள் செப்டம்பர் மாதம் 10 முதல் 15ம் தேதி வரை நடத்திய ஆய்வில், 698 நபர்கள் பங்கேற்றனர். அவர்களில் நோய் தொற்று ஆண்டிபாடிஸ் எனப்படும் எதிர்ப்பான்கள் 186 (20.7%) பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றின் தாக்கம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தில் (20.7% மற்றும் 20.6%) மற்றும் ஆண் பெண் இரு பாலாரிலும் (21.4% மற்றும் 20%) கிட்டத்தட்ட சரி சமமாக உள்ளதை உறுதி செய்துள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

இந்த ஆய்வில் ஆகஸ்ட் 30 அன்று வரை கிருமி தொற்றின் தாக்கத்தை அறிந்து கொள்ள இயலும். புதுச்சேரியின் மக்கள் தொகையில் அன்று அந்த மொத்த நிகழ்வு எண்ணிக்கை 1.03% (12,331/12,00,000). இந்த ஆய்வின் மூலம் ஆகஸ்ட் மாத இறுதியில் புதுச்சேரியில் மிக அதிக அளவில் நோய் தொற்று பரவல் இருந்ததும், ஆர்-டி பிசிர் பரிசோதனையில் இருப்பதை விட இருபது மடங்கு நோய் எதிர்ப்பான்கள் மக்களுக்கு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று வரை ஐந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.