புதுச்சேரியில் மேலும் 550 பேருக்கு கொரோனா; பாதிப்பு 13,556 ஆக உயர்வு!

 

புதுச்சேரியில் மேலும் 550 பேருக்கு கொரோனா; பாதிப்பு 13,556 ஆக உயர்வு!

உலகின் எல்லா இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனுள் இந்தியாவும் ஒன்று. காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்ட இந்த கொரோனாவில் இருந்து மக்களை காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. இந்த கொடிய வகை கொரோனாவின் பிடியில் சிக்கிய மாநிலங்களுள் புதுச்சேரியும் ஒன்று. இதனால் அங்கு தற்போது 52 பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. தேவைப்பட்டால் புதுச்சேரி முழுவதிலும் கூட முழுமுடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

புதுச்சேரியில் மேலும் 550 பேருக்கு கொரோனா; பாதிப்பு 13,556 ஆக உயர்வு!

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்பி ஒருவருக்கு கொரோனா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எல்லாருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் ஒரே நாளில் 550 பேருக்கு கொரோனா உறுதியானதால் 13,556 ஆக அதிகரித்துள்ளது.