புதுச்சேரியில் அதிகரித்து வரும் பாதிப்பு: மேலும் 245 பேருக்கு கொரோனா உறுதி!

 

புதுச்சேரியில் அதிகரித்து வரும் பாதிப்பு: மேலும் 245 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் கொரோனா அதிகமாக பரவாது என மக்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் 2 மாதங்களிலேயே கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்ட நிலையிலும், பாதிப்பு குறையாததால் தற்போது அன்லாக செயல்பட தொடங்கி விட்டது. இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரும் அதே சூழலில் புதுச்சேரியில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. தற்போது அங்கு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.

புதுச்சேரியில் அதிகரித்து வரும் பாதிப்பு: மேலும் 245 பேருக்கு கொரோனா உறுதி!

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஊரடங்கு குறித்து 12 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே ஏனாம் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், அங்கு முழு பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் எவ்வளவு பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. அங்கு புதிதாக 245 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5624 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், 3000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.