புதுச்சேரியில் மேலும் 264 பேருக்கு கொரோனா உறுதி; நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு!

 

புதுச்சேரியில் மேலும் 264 பேருக்கு கொரோனா உறுதி; நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவையின் போது காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், மரத்தடியில் சட்டப்பேரவை அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் தான் அதிக அளவு பாதிப்பு இருப்பதால், அங்கு இன்று முதல் 11 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மேலும் 264 பேருக்கு கொரோனா உறுதி; நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு!

கொரோனா பாதிப்பு குறித்து பேசிய முதல்வர் நாராயணசாமி, மக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்றும் ஊரடங்கு குறித்து 12 ஆம் தேதி நடைபெற உள்ள பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். புதுச்சேரி அரசு இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் மேலும் 264 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5,382 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,201 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், அங்கு 87 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.