400 கோடி சேதம்; 50 கோடி நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

400 கோடி சேதம்; 50 கோடி நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி- மரக்காணம் இடையே இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரையை கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூரில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக புதுச்சேரியில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் சாலைகளிலிருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாராயணசாமி, நேரில் ஆய்வு செய்தார்.

400 கோடி சேதம்; 50 கோடி நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக 50கோடி இடைக்கால நிவாரணம் கோரி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக 400 கோடி அளவிற்கான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக 50 கோடி நிதி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.