புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு: முதலமைச்சர்

 

புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு: முதலமைச்சர்

புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்றும், மக்கள் ஒத்துழைக்கவில்லை எனில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றப்படும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் இறப்பு விகிதத்தை குறைக்கும் நடவடிக்கையாக கட்டாயம் 10 நாட்கள் மருத்துவமனையில் கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மக்களுக்கு நோய் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை இதனால் தொற்று அதிகரிப்பது வேதனை அளிக்கிறது.

புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு: முதலமைச்சர்

கொரோனா தொற்றை குறைக்க நாளை முதல் ஒவ்வொரு செய்வாய்கிழமைகளிலும் 24 மணி நேர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் இது ஞாயிற்றுக்கிழமையன்றும் மாற்றப்படும். அமைச்சரவையின் முடிவை மீறி ஏ.எப்.டி பஞ்சாலையை மூட ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். அரசு சார்பு தொழிற்சாலைகளை மூட கிரண்பேடி திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி அரசு தொழிலாளர் பக்கம் தான் உள்ளது எந்த தொழிற்சாலையையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை” என தெரிவித்தார்.