விடாது கருப்பாக துரத்தும் முதல்வர் நாற்காலி: 5 ஆண்டு காலம் நாராயணசாமியாலும் முடியலயே!

 

விடாது கருப்பாக துரத்தும் முதல்வர் நாற்காலி: 5 ஆண்டு காலம் நாராயணசாமியாலும் முடியலயே!

அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சட்டப்பேரவையில் நாராயணசாமி அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவிருக்கிறார். இதன்மூலம் நாராயணசாமியாலும் தனது முதல்வர் நாற்காலியை 5 ஆண்டுகாலம் தக்கவைக்க முடியவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

இது ஏதோ அரிதாக நடக்கக்கூடிய அரசியல் சித்து விளையாட்டு அல்ல. சட்டப்பேரவை என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே விடாது கருப்பாக துரத்துகிறது முதல்வர் நாற்காலி. புதுச்சேரியில் இதுவரை யாராலும் 5 ஆண்டு காலம் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. அத்தி பூத்தாற் போல தற்போதைய என்ஆர் காங்கிரஸ் தலைவரான ரெங்கசாமி மட்டுமே வெற்றிகரமாக 5 ஆண்டு காலம் அந்த நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவர்.

விடாது கருப்பாக துரத்தும் முதல்வர் நாற்காலி: 5 ஆண்டு காலம் நாராயணசாமியாலும் முடியலயே!

1962ஆம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவை அமைக்கும் அதிகாரத்தை மக்களவைக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றினார். 239ஏ என்ற அந்த மசோதாவானது 1963ஆம் ஆண்டு சட்டமாக உருமாறியது. இந்தச் சட்டத்தின்படி அப்போதே புதுச்சேரியில் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. அதன்படி மக்களால் 30 எம்எல்ஏக்களும் மத்திய அரசால் 3 நியமன எம்எல்ஏக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விடாது கருப்பாக துரத்தும் முதல்வர் நாற்காலி: 5 ஆண்டு காலம் நாராயணசாமியாலும் முடியலயே!
மைக்கில் பேசுபவர் லால் பகதூர் சாஸ்திரி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதல்வராக எட்வர்ட் குபேர் என்பவர் பதவியேற்றார். ஆனால் அவர் கிட்டத்தட்ட 1 ஆண்டுகாலம் வரையிலே ஆட்சி செய்தார். அதன்பிறகு 1964ஆம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது. அதில் அமோகமாக வென்ற காங்கிரஸ் கட்சியின் வெங்கடசுப்பா 2 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தார். அவரைத் தொடர்ந்து 1967ஆம் ஆண்டு பாரூக் மரைக்காயர் ஓராண்டு கூட முதல்வர் பதவியில் நீடிக்கவில்லை. மியூஸிக்கல் சேர் போல மீண்டும் வெங்கடசுப்பா 6 மாதங்கள் முதல்வரானார்.

Image result for எட்வர்ட் குபேர்

முடிவாக 1968ஆம் ஆண்டு 6 மாதங்கள் ஜனாதிபதி ஆட்சியே வந்துவிட்டது. 1969ஆம் ஆண்டு தேர்தலில் பாரூக் மரைக்காயர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக 1974ஆம் ஆண்டு வரை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். என்ன நினைத்தார் என்று தெரியவில்லை திடீரென்று ராஜினாமா செய்தார். அதிகமான ஜனாதிபதி ஆட்சியில் புதுவை தான் இருக்க வேண்டும் என்பது போல் வெறும் 62 நாட்களுகாக இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமலானது.

Image result for புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார்

1974ஆம் தேர்தலுக்குப் பின் அதிமுகவின் சுப்பிரமணியன் ராமசாமி 22 நாட்கள் முதல்வராக இருந்த நிலையில், 3ஆவது முறையாக 1977ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஜனாதிபதி ஆட்சியே இருந்து வந்தது. இதுக்கு எதுக்கு தேர்தல் நடத்திகிட்டு என்று தேர்தல் ஆணையத்தையே யோசிக்கவைக்கும் சிம்மசொப்பனமாக புதுச்சேரி திகழ்ந்தது. (இதுக்கே தலை சுத்திட்டா எப்படி இன்னும் திரில்லிங்கான இடம் நிறைய இருக்கு)

Image result for புதுச்சேரி பாரூக் மரைக்காயர்
பாரூக் மரைக்காயர்

1977ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் மீண்டும் அதிமுகவின் சுப்பிரமணியன் ராமசாமி முதல்வரானார். சரி இவராவது ஆட்சியைக் காப்பாற்றுவார் என்று பார்த்தால் ஒரு ஆண்டில் தனது ஆட்டையை முடித்துக்கொண்டார். இப்போ என்ன நீங்களே யூகிச்சிருப்பிங்ளே. ஆமா 4ஆவது ரவுண்ட் ஜனாதிபதி ஆட்சி. 1980ஆம் ஆண்டு வரையிலும் இந்த ஆட்சி அமலில் இருந்தது. அதன்பின் நடத்தப்பட்ட தேர்தலில் திமுகவின் எம்டிஆர் ராமச்சந்திரனும் 3 ஆண்டுகளுக்குள் பதவியைப் பலி கொடுத்தார். வேறென்ன வெற்றிகரமாக 5ஆவது முறையாக ஐனாதிபதி ஆட்சி.

விடாது கருப்பாக துரத்தும் முதல்வர் நாற்காலி: 5 ஆண்டு காலம் நாராயணசாமியாலும் முடியலயே!
சுப்பிரமணியன் ராமசாமி

1985 தேர்தலில் பாரூக் மரைக்காயர் மீண்டும் முதல்வரானார். ஐந்தாண்டு நெருங்கும் நிலையிலேயே விரைவாகவே தேர்தல் நடைபெற்றதால் அவரால் ஐந்தாண்டு சாதனையைப் படைக்கமுடியவில்லை. 1990ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் எம்டிஆர் ராமச்சந்திரன் மீண்டும் முதல்வரானாலும் ஓராண்டு மட்டுமே பதவி வகித்தார். ஏறாத்தாழ 4 மாதங்கள் புதுவையில் 6ஆவது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

விடாது கருப்பாக துரத்தும் முதல்வர் நாற்காலி: 5 ஆண்டு காலம் நாராயணசாமியாலும் முடியலயே!
சால்வை போத்தியிருப்பவர் எம்டிஆர் ராமச்சந்திரன்

1991ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வரான வைத்தியலிங்கமும் 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் நிலையில்தான் இருந்தார். ஆனால் அவரால் முடியவில்லை. 1996 தேர்தலில் திமுகவின் ஜானகிராமன் சுமார் 4 ஆண்டுகாலம் வரை முதல்வராக இருந்தார். அதன்பின்னர் சிறிய காலம் சண்முகம் முதல்வராக இருந்தார்.

விடாது கருப்பாக துரத்தும் முதல்வர் நாற்காலி: 5 ஆண்டு காலம் நாராயணசாமியாலும் முடியலயே!
வைத்தியலிங்கம்

2001ஆம் ஆண்டு தேர்தலிலும் இதே நிலை தான் தொடர்ந்தது. சண்முகமும் ரெங்கசாமியும் முதல்வர் நாற்காலிக்காகச் சண்டை போட்டுக்கொள்ளாத குறையாக மாறி மாறி அமர்ந்தனர். 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போட்டியில் சண்முகம் விலகிக்கொண்டார். வைத்தியலிங்கம் ரெங்கசாமியுடன் சேர்ந்துகொண்டார்.

ஒருவழியாக 2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்த ரெங்கசாமி நாற்காலியை யாரிடம் கொடுக்காமல் 2016 வரை முதல் முறையாக முழுமையாக 5 ஆண்டு காலம் முதல்வர் பதவியில் இருந்து சாதனை படைத்தவர். 2016ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நாராயணசாமியும் தற்போது ஆட்சியை இழந்துவிட்டார். இப்போதைய அரசியல் நிலவரப்படி அங்கு மீண்டும் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என்றே தோன்றுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நெருங்குவதால் அதிமுக-என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பில்லை.