கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

 

கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவிவிலகக்கோரி 3 நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில் அந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் இரட்டை ஆட்சி முறை. புதுச்சேரியில் பாஜக துணையுடன் இரட்டை ஆட்சி முறையை நடத்தி வந்தார் கிரண்பேடி. புதுச்சேரியில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு ஆளுநர் கிரண்பேடிதான் காரணம். சட்டமன்றம் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும், உரிமையை பறிக்கவும் மத்திய அரசு திட்டம். ஜன.22ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்- முதல்வர் நாராயணசாமி. ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தவுள்ளோம்.

கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படக்கூடாது, மத்திய அரசில் இருந்து நிதி கிடைக்கக்கூடாது என்று பல்வேறு வகையில் கிரண்பேடி தடையாக இருந்ததால் ஆளுநரை எதிர்த்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கொரோனாவிற்கு அச்சப்பட்டு பயந்து வெளியில் வராமல் இருந்த கிரண்பேடி, உயிருக்கு பயந்து 7 அடுக்கு பாதுகாப்பை தனக்கு தானே போட்டுள்ளார். ஆட்சியை பற்றி கவலைப்படவில்லை, மாநில உரிமையில் யார் தலையிட்டாலும் உயிரை கொடுத்து காப்பேன்” எனக் கூறினார்.