நிவர் புயல் பாதிப்பு: ரூ.100 கோடி வழங்கக்கோரி புதுச்சேரி முதல்வர் கடிதம்!

 

நிவர் புயல் பாதிப்பு: ரூ.100 கோடி வழங்கக்கோரி புதுச்சேரி முதல்வர் கடிதம்!

கடந்த 25ம் தேதி கரையைக் கடந்த நிவர் புயல் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றது. புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள், தொடர் கனமழையால் நாசமாகின. அதே போல, நூற்றுக் கணக்கான வீடுகள் மழையால் சேதமடைந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிய நிலையில், விளை நிலங்களில் பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிவர் புயல் பாதிப்பு: ரூ.100 கோடி வழங்கக்கோரி புதுச்சேரி முதல்வர் கடிதம்!

இந்த நிலையில், நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியிருக்கிறார். புயலால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இடைக்கால நிவாரணமாக ரூ. 100 கோடி வழங்க வேண்டும் என்றும் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி உள்ளதால் தொகையை விரைந்து வழங்குமாறும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு புதுச்சேரிக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.