நேற்று மருத்துவமனையில் ஸ்டாலின் ; இன்று அறிவாலயம் வந்த புதுச்சேரி முதல்வர்!

நேற்று மருத்துவமனையில் ஸ்டாலின் ; இன்று  அறிவாலயம் வந்த புதுச்சேரி முதல்வர்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

நேற்று மருத்துவமனையில் ஸ்டாலின் ; இன்று  அறிவாலயம் வந்த புதுச்சேரி முதல்வர்!

சென்னை அறிவாலயத்திற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியனுடன் இன்று திடீரென வருகை புரிந்தார்.பின்னர் ஸ்டாலினுடான சந்திப்புக்கு பிறகு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாரயணசாமி, “ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தீவிரமாக இருந்து வந்ததால் அவரை சந்திக்கும் நல்வாய்ப்பு அமையவில்லை. தற்போது அவரை சந்திக்க வருவதாக கூறி அனுமதி கேட்டேன். அனுமதி கிடைத்ததால் தற்போது வந்து சந்தித்தேன் . புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார். புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் – திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். வருகின்ற தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றிபெறும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைப்பார்” என்று தெரிவித்து விட்டு சென்றார்.

நேற்று மருத்துவமனையில் ஸ்டாலின் ; இன்று  அறிவாலயம் வந்த புதுச்சேரி முதல்வர்!

ஸ்டாலினும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படும் அதே சமயம், நேற்று மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ஸ்டாலின் . மயக்கம் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நேற்று மருத்துவமனையில் ஸ்டாலின் ; இன்று  அறிவாலயம் வந்த புதுச்சேரி முதல்வர்!

இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின் “எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி BP, ECG பரிசோதனை செய்யப்பட்டது; மற்றபடி ஏதும் இல்லை” என்றார். இதனால் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விசாரித்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.