ஏர்போர்ட் மாதிரி வாட்டர்போர்ட் சர்வீஸ் : புதுச்சேரி – சென்னை – கன்னியாகுமரியை இணைக்கும் நீர்வழி போக்குவரத்து!

ஏர்போர்ட் மாதிரி வாட்டர்போர்ட் சர்வீஸ் : புதுச்சேரி – சென்னை – கன்னியாகுமரியை இணைக்கும் நீர்வழி போக்குவரத்து!

சென்னை – புதுச்சேரி – கன்னியாகுமரி இடையே நீர்வழி போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை காணொலி காட்சி மூலம் அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி – சென்னை இடையே நீர்வழிப் போக்குவரத்தை அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அது எனது கனவு திட்டமும் தான்.

ஏர்போர்ட் மாதிரி வாட்டர்போர்ட் சர்வீஸ் : புதுச்சேரி – சென்னை – கன்னியாகுமரியை இணைக்கும் நீர்வழி போக்குவரத்து!

விரைவில் சென்னை – புதுச்சேரி – கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து தொடங்கப்படும். அத்துடன் புதுச்சேரியிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் வடமாநிலங்களில் முக்கிய நகரங்களும் நீர்வழி போக்குவரத்து மூலம் இணைக்கவும் மத்திய அரசு உதவி செய்யும்” என்றார்.

ஏர்போர்ட் மாதிரி வாட்டர்போர்ட் சர்வீஸ் : புதுச்சேரி – சென்னை – கன்னியாகுமரியை இணைக்கும் நீர்வழி போக்குவரத்து!

தொடர்ந்து பேசிய அவர், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் நீர்வழிபோக்குவரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் முதலீடுகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நீர்வழி போக்குவரத்து வந்தால் மக்களுக்கு ஏர்போர்ட் போல் வாட்டர் போர்ட் அனுபவமும் கிடைக்கும். இதன் மூலம் நாடு முழுவதுமுள்ள கடலை ஒட்டியுள்ள நகரங்களை இணைக்க முடியும்.இதனால் தரைவழி போக்குவரத்தை போல நீர்வழி போக்குவரத்து முக்கியத்துவம் பெறும் என்பது கவனிக்கத்தக்கது.