“ஸ்டாலின் கருத்து ஆடு நனைவதை கண்டு ஓநாய் அழுவது போல உள்ளது” : அதிமுக வையாபுரி மணிகண்டன் தாக்கு!

 

“ஸ்டாலின் கருத்து  ஆடு நனைவதை கண்டு ஓநாய் அழுவது போல உள்ளது” : அதிமுக வையாபுரி மணிகண்டன் தாக்கு!

புதுச்சேரி சட்டமன்ற அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன், காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“ஸ்டாலின் கருத்து  ஆடு நனைவதை கண்டு ஓநாய் அழுவது போல உள்ளது” : அதிமுக வையாபுரி மணிகண்டன் தாக்கு!

அதில், “புதுச்சேரியை ஆளும் மாண்புமிகு கோயபல்ஸ் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், இரட்டை வேடம் போடும் திமுகவும் மாநில மாணவர்கள் நலனைப் பற்றி துளியும் அக்கறை கொள்வதில்லை. புதுச்சேரியில் அதிமுக எதிர்ப்பையும் மீறி ஒரு மாதத்துக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பல மாணவர்கள் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு சாதகமாக காங்கிரஸ் அரசு எடுத்த முடிவுக்கு திமுகவும் ஜால்ரா அடித்துள்ளது. தற்போது கொரோனா வேகம் நாடெங்கும் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தமிழக முதலமைச்சர், துணை முதல்வர் இருவரும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளனர் .எடுத்தேன்; கவிழ்த்தேன் என எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆடு நனைவதை கண்டு ஓநாய் அழுவது போல கருத்து தெரிவித்துள்ளார்.

“ஸ்டாலின் கருத்து  ஆடு நனைவதை கண்டு ஓநாய் அழுவது போல உள்ளது” : அதிமுக வையாபுரி மணிகண்டன் தாக்கு!

தமிழகத்திற்கு ஒரு நிலைப்பாடு ; புதுச்சேரிக்கு ஒரு நிலைப்பாடு என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் இரட்டை வேடம் பூண்டுள்ளார். மாணவர்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பதை கண்டித்து காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் தயாரா?

“ஸ்டாலின் கருத்து  ஆடு நனைவதை கண்டு ஓநாய் அழுவது போல உள்ளது” : அதிமுக வையாபுரி மணிகண்டன் தாக்கு!

பள்ளிகள் திறப்பு விஷயத்தில் மட்டுமல்ல காங்கிரஸ் -திமுக கூட்டணி மாணவர்கள் எதிர்கால நலனை பற்றி எந்தவித கவலையோ அக்கறையோ கொண்டது கிடையாது. தனியார் மருத்துவமனைகளில் 100 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடு பெற சட்டம் கொண்டுவரப்படும் என பொய்யர்கள் கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை 50 சதவீத இடங்கள் பெறவில்லை. இதனால் புதுச்சேரியை சேர்ந்த கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு கானல் நீராகி விட்டது. தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களிடம் தேவையானதை பெற்றுக் கொண்டு அவற்றை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றுவது தான் காங்கிரஸ்- இரட்டை வேட திமுக அரசின் சாதனை.இது வெட்கக்கேடானது. புதுச்சேரி மாநில மாணவர்கள் எதிர்கால நலனை கருதி அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற அரசு உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில உயிர் தியாகம் செய்யவும் தயார் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்த ஒதுக்கீட்டைப் பெற முதலில் புதுச்சேரி மாநில மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த ஒதுக்கீட்டைப் பெற உயிர்த்தியாகம் செய்ய அவர் முன்வந்தால் அதனை வரவேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.