கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை – 6 பேர் போக்சோவில் கைது

 

கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை – 6 பேர் போக்சோவில் கைது

புதுச்சேரி

கொத்தடிமைகளாக இருந்த சிவகங்கையை சேர்ந்த சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரை, புதுச்சேரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோர்க்காடு கீழ்சாத்தமங்கலம் பகுதியில், சிவகங்கையை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் சிலர் தங்களது பெண் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது.

கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை – 6 பேர் போக்சோவில் கைது

இந்நிலையில், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் குழந்தைகளை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக, குழந்தைகள் நல துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் அறையில் அடைத்து வைக்கப்பட்டும், வாத்துகள் மேய்த்துக்கொண்டும் இருந்த 5 சிறுமிகளை மீட்ட அதிகாரிகள், அவர்களை அரசு காப்பகத்தில் தங்கவைத்தனர். மேலும் இதுதொடர்பாக புதுச்சேரி முதுநிலை எஸ்.பி-யிடம், அதிகாரிகள் புகார் அளித்தனர்.

கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை – 6 பேர் போக்சோவில் கைது

அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீட்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மீட்கப்பட்ட சிறுமிகளை ஒரு கும்பல் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வில்லியனூர் பகுதியை சேர்ந்த கன்னியப்பன், ராஜ்குமார், பசுபதி, ஐயனார், சிவா மற்றும் மூர்த்தி ஆகிய 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.