புதுச்சேரி: கொரோனாவைக் கட்டுப்படுத்த 10 நாட்கள் தளர்வில்லா ஊரடங்கு… அ.தி.மு.க வலியுறுத்தல்

புதுச்சேரி: கொரோனாவைக் கட்டுப்படுத்த 10 நாட்கள் தளர்வில்லா ஊரடங்கு… அ.தி.மு.க வலியுறுத்தல்

புதுச்சேரியில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 10 நாட்களுக்கு எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி அ.தி.மு.க வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி: கொரோனாவைக் கட்டுப்படுத்த 10 நாட்கள் தளர்வில்லா ஊரடங்கு… அ.தி.மு.க வலியுறுத்தல்
புதுச்சேரி அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவர் அன்பழகன் இன்று புதுவை முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அதில், “கொரோனா தொற்றாளர்களுக்கு போதிய படுக்கை வசதிகள் நம்மிடம் இல்லை. இந்நிலையில், மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க பரிசோதனை முறையில் 10 நாட்களுக்குத் தடை விதிக்கும் விதத்தில் வரும் 25-ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 5-ம் தேதி வரை கடுமையான தளர்வில்லா ஊரடங்கை அறிவிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில், பிற மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சுமார் 168

புதுச்சேரி: கொரோனாவைக் கட்டுப்படுத்த 10 நாட்கள் தளர்வில்லா ஊரடங்கு… அ.தி.மு.க வலியுறுத்தல்

சாலைகளையும் முழுமையாக மூட வேண்டும். இந்த 10 நாட்களுக்கு மின் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பத்து நாட்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்களை மக்களுக்கு வழங்கிவிட்டு, உடனடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மக்களின் உயிர் காக்க, மக்களும் வணிகம் சம்பந்தப்பட்டவர்களும் சில தினங்களுக்குள் இதைச் செய்ய முன்வர வேண்டும். இந்த 10 தினங்களுக்குள் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

புதுச்சேரி: கொரோனாவைக் கட்டுப்படுத்த 10 நாட்கள் தளர்வில்லா ஊரடங்கு… அ.தி.மு.க வலியுறுத்தல்
புதுச்சேரியில் இயங்கும் அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நட்சத்திர உணவகங்கள், தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். குறிப்பாக, நம் மாநிலத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மூன்று மாத காலத்திற்கு அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். பரிச்சார்த்தமாக, சின்னஞ்சிறு மாநிலமான நம் புதுச்சேரியில் இந்த நடைமுறையை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.