ஒரே நேரத்தில் வெளியான அதிமுக, காங்கிரஸ்- பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!

 

ஒரே நேரத்தில் வெளியான அதிமுக, காங்கிரஸ்- பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள புதுச்சேரியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதற்கு போட்டியாக என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து அமைத்து போட்டியிடுகின்றன.

புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 மற்றும் அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

ஒரே நேரத்தில் வெளியான அதிமுக, காங்கிரஸ்- பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!

புதுச்சேரியில் அதிமுக சார்பாக உப்பளம் தொகுதியில் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் ஓம் சக்திசேகர், முத்தியால்பேட்டை தொகுதியில் வையாபுரி மணிகண்டன், முதலியார்பேட்டை தொகுதியில் பாஸ்கர், காரைக்கால் தெற்கு தொகுதியில் அசனா ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர்

காங்கிரஸ் கட்சி சார்பாக ஊசுடு- கார்த்திக்கேயன், கதிர்காமம்- செல்வநாதன், இந்திரா நகர்-எம்.கண்ணன், காமராஜ் நகர்- ஷாஜகான், லாஸ்பேட்டை- வைத்தியநாதன், முத்தியால் பேட்டை- செந்தில் குமரன் அரியாங்குப்பம்- ஜெயமூர்த்தி, மணவெளி அனந்தராமன், ஏம்பலம்- கந்தசாமி, நெடுங்காடு- மாரிமுத்து, திருநள்ளாறு- கமலக்கண்ணன், காரைக்கால் வடக்கு- சுப்ரமணியன், மாஹே- ரமேஷ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

அதேபோல் பாஜக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள்:

  1. காலப்பட்டு- கல்யாண சுந்தரம்

2.காமராஜர் நகர்- ஜான்குமார்

3.நெல்லிதோப்பு- ரிச்சட்(ஜான்குமார் மகன்)

4.மண்ணாடிப்பட்டு- நமச்சிவாயம்

5.ஊசுடு- சாய் ஜெ சரவணகுமார்

6.மணவெளி – ஏம்பலம் செல்வம்

7.லாஸ்பேட்டை- சாமிநாதன்

8.திருநள்ளாறு-தொழல்திபர் ராஜசேகர்

9.நிருவி திருப்பட்டினம்- மனேகர்