“வேளாண் சட்டங்கள் குறித்து பொதுமக்களின் வீடு தேடி சென்று பிரச்சாரம்” – கே.பாலகிருஷ்ணன்

 

“வேளாண் சட்டங்கள் குறித்து பொதுமக்களின் வீடு தேடி சென்று பிரச்சாரம்” – கே.பாலகிருஷ்ணன்

வேளாண் சட்டங்கள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் 31ஆம் வரை பொதுமக்களின் வீடுதேடி சென்று பிரச்சாரம் நடத்த உள்ளதாக, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசின் அனைத்து தவறுகளுக்கும் முதல்வர் துணையாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன், மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக கொண்டுவரப்படும் விவசாய சட்டங்களை எதிர்க்க வேண்டிய முதல்வர், அந்த சட்டங்களுக்கு ஆதரவாக பேசுவதாகவும் கூறினார்.

“வேளாண் சட்டங்கள் குறித்து பொதுமக்களின் வீடு தேடி சென்று பிரச்சாரம்” – கே.பாலகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணன், சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு தான், முதல்வர் பிரச்சாரம் துவங்கும்போது 2,500 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக – பா.ஜ.க கூட்டணியில் சமரசமற்ற போர் நடைபெறுவது தெரிவதாக கூறிய பாலகிருஷ்ணன், கூட்டணியில் அதிமுக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.