பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 

பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பிரிட்டனில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் வான்வழி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதோடு, கடல்வழி போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு வரும் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நேற்று பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதாகவும், லண்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், லண்டனில் இருந்து வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், பிரிட்டனிலிருந்து நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை இந்தியா வந்தவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளின் மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், முடிவு நெகட்டிவ் என்று வந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.