மீண்டும் பொதுமுடக்கமா? தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஆலோசனை!

 

மீண்டும் பொதுமுடக்கமா? தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஆலோசனை!

நவம்பர் மாதத்திற்கு அங்கு ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

மீண்டும் பொதுமுடக்கமா? தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் இதுவரை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை .அதேபோல் மெரினா கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூறுவதற்கு முழுமையாக அனுமதி வழங்கப்படவில்லை. 100 பேருக்கு மிகாமல் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்த நிலையில் வேல் யாத்திரையை மனதிற்கொண்டு அதற்கும் தடை விதித்தது. இதன்காரணமாகவே கூட்டம் கூடுவதை தவிர்க்க சூரசம்ஹாரம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகளும் பக்தர்கள் இன்றி நடந்து முடிந்தது. இருப்பினும் கோவில் கும்பாபிஷேகங்கள் நடத்த அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.

மீண்டும் பொதுமுடக்கமா? தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஆலோசனை!

இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் ஊரடங்கு முழுவதும் ரத்து செய்யப்படுமா அல்லது மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர்கள் உடன் கலந்து ஆலோசிக்கும் முதல்வர், அடுத்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிய தளர்வுகள் அளிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.