பொது மக்கள் அயோத்தியில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்! – யோகி ஆதித்யநாத் கோரிக்கை

அயோத்தில் வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் அங்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.


அயோத்தியில் ராமஜென்ம பூமியில் வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த விழாவுக்கு மொத்தம் 200 பேர் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க இந்த ஏற்பாடு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் என்பது பக்தர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்க விழாவில் பங்கேற்பது புண்ணியம் என்று கருதுவதால் ஏராளமான பக்தர்கள் அயோத்தி நோக்கி வரத் தொடங்கி உள்ளனர். இதனால், அயோத்தி எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மாற்றுப் பாதைகளில், நதி வழியாக வந்துவிடக் கூடாது என்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது மக்கள் அயோத்தியில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

மக்கள் தங்கள் வீட்டில் இருந்தே இதை காணலாம். ராமர் கோவில் கட்டுமானப் பணி சிறப்பாக நடக்க வருகிற 4, 5ம் தேதிகளில் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்களில் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கோவில் பூமி பூஜை விழா ஆகஸ்ட் 5ம் தேதி பகல் 12.30 முதல் 12.40 வரை அபிஜித் முகூர்த்த நேரத்தில் நடத்தப்படும்.

பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானப் பணியைத் தொடங்கி வைப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் உள்ள அனுமார் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

ரூ.15 லட்சத்துடன் கொள்ளையர்கள் ஓட்டம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்!- சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

சென்னையில் பட்டப்பகலில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சினிமா விஞ்சம் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ராயபுரம் ஆதம் தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது (29)...

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க : எம்பி திருமாவளவன் வலியுறுத்தல்!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள்...

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல்...

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...