விமான பெட்ரோல் விலை 6.7 சதவீதம் அதிகரிப்பு.. விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்

விமான பெட்ரோல் விலை 6.7 சதவீதம் அதிகரிப்பு.. விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்

பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் நேற்று விமான பெட்ரோல் விலையை உயர்த்தின. விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் 15 தினங்களுக்கு ஒரு முறை விமான பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் நேற்று இந்த நிறுவனங்கள் விமான பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்தன.

விமான பெட்ரோல் விலை 6.7 சதவீதம் அதிகரிப்பு.. விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்
கச்சா எண்ணெய் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் விமான பெட்ரோல் விலையை கிலோ லிட்டருக்கு (ஆயிரம் லிட்டர்) 6.7 சதவீதம் அதிகரித்துள்ளன. தற்போது டெல்லியில் ஆயிரம் லிட்டர் விமான பெட்ரோல் விலை ரூ.3,885 அல்லது 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.61,690க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விமான பெட்ரோல் விலை 6.7 சதவீதம் அதிகரிப்பு.. விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

விமான பெட்ரோல் விலையை தொடர்ந்து விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயரும் என எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 16 தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், பெட்ரோல், டீசல் தேவை குறைந்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவில் தேவை அதிகரிப்பு மற்றும் டாலர் மதிப்பு குறைந்தத போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.