திருப்பத்தூரில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

 

திருப்பத்தூரில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் அண்ணா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு வருட காலமாக முறையாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்காததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

இதனால் திருப்பத்தூர் – பெங்களூர் சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மற்றும் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இனி வருங்காலங்களில் முறையாக குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.