முறையாக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

 

முறையாக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே முறையாக குடிநீர் வழங்காத டேங்க் ஆபரேட்டரை கண்டித்து, கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்றம்பள்ளி தாலுகா கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுகொல்லை பகுதியில் 45-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

முறையாக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

இந்த பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான 4 ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 3 ஆழ்துளை கிணறுகள் பழுதானதால், ஒரு ஆழ்துளை கிணறு மூலம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி டேங்க் ஆப்பரேட்டர் சரஸ்வதி என்பவர், குறிப்பிட்ட நேரத்திற்கு தண்ணீர் விடாமல் காலை அல்லது மாலை என ஏதேனும் ஒரு நேரத்திற்கு குடிநீர் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாட்டிற்கு உள்ளான அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், டேங்க் ஆப்பரேட்டர் முறைாயக குடிநீர் வழங்க வலியுறுத்தி மேலூர் அருகே நாட்றம்பள்ளி – குப்பம் சாலையில், காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

முறையாக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்