தரமற்ற சாலை அமைப்பதாக புகார்- நெடுஞ்சாலை துறை வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

தரமற்ற சாலை அமைப்பதாக புகார்- நெடுஞ்சாலை துறை வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

திருவள்ளூர்

திருத்தணி அருகே தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்படுவதாக கூறி நெடுஞ்சாலைத்துறை வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தரமற்ற சாலை அமைப்பதாக புகார்- நெடுஞ்சாலை துறை வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பி.சி.என்.கண்டி முதல் பெரியகரம்பூர் வரையிலான ஊராட்சி சாலையில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கும் நடைபெற்று வருகிறது. இதற்காக ஜல்லி கற்கல் சாலையில் கொட்டப்பட்டதால், சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில், நேற்று இரவு ஜல்லிக் கற்களுக்கு இடையே இருசக்கர வாகனம் சிக்கி விபத்திற்கு உள்ளானதில் அதேபகுதியை சேர்ந்த பொன்னையன் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அவரை கிராம மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தரமற்ற சாலை அமைப்பதாக புகார்- நெடுஞ்சாலை துறை வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

விபத்து காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் இன்று சாலை பணிகளுக்கு சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல மாதங்களாக சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், சாலை முழுவதும் ஜல்லி பரப்பி, ஆளுங்கட்சியினர் தரமற்ற முறையில் சாலை அமைப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், தங்கள் பகுதியில் தரமான முறையில், விரைந்து சாலை பணிகள் முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விரைந்து சாலையை அமைப்பதாக உறுதி அளித்தன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.