“தமிழ்நாட்டில் தனியாருக்கு குத்தகைக்குச் செல்லும் பொதுச்சொத்துக்கள்” – 6 விமான நிலையங்கள் தனியாருக்கு விட திட்டம்!!

“தமிழ்நாட்டில் தனியாருக்கு குத்தகைக்குச் செல்லும் பொதுச்சொத்துக்கள்” – 6 விமான நிலையங்கள் தனியாருக்கு விட திட்டம்!!

அரசு சொத்துகளை குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் நோக்கத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மத்திய நிதித்துறை மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்துய் தேசிய பணமாக திட்டத்தை திட்டத்தின் மூலம் அரசுக்கு சொந்தமாக உள்ள 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

“தமிழ்நாட்டில் தனியாருக்கு குத்தகைக்குச் செல்லும் பொதுச்சொத்துக்கள்” – 6 விமான நிலையங்கள் தனியாருக்கு விட திட்டம்!!

2022 முதல் 2025 வரை யிலான 4 ஆண்டுகாலம் இந்த திட்டத்தில் நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் சொத்துக்கள் அதிக அளவில் உள்ளன. அத்துடன் 15 ரயில்வே நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 160 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இறுதிக் நிதி திட்டத்தின் மூலம் மாநில அரசுக்கு தலா ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிலான தொகையை 50 வருடம் வட்டியில்லா கடனாக மத்திய அரசின் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் தனியாருக்கு குத்தகைக்குச் செல்லும் பொதுச்சொத்துக்கள்” – 6 விமான நிலையங்கள் தனியாருக்கு விட திட்டம்!!

இந்நிலையில் ஒன்றிய அரசின் தேசிய சொத்துக்கள் குத்தகை திட்டத்தின் கீழ் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 6 விமான நிலையங்களை தனியாரிடம் விட திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தின் சில சொத்துக்களும், நீலகிரி மலை ரயிலும் தனியாருக்கு விடப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தேசிய பணமாக்கும் திட்டம் என்பது அரசு சொத்துக்கள் மீது தனியார் நிறுவனங்கள் மூலம் முதலீட்டை ஈர்ப்பது மட்டுமே என்று தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதன் மூலம் புதிய அரசு திட்டங்களையும் கட்டுமான திட்டங்களுக்கான நிதி திரட்ட முடியும் என்று கூறியுள்ளார். அத்துடன் அரசின் சொத்துக்கள் முழுமையாக தனியாருக்கு கொடுக்கப்படும் என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர் இது ஒரு குத்தகை விடும் நடைமுறை மட்டுமே என்றும் விளக்கமளித்துள்ளார்